வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி ஐஸ்க்ரீம்...

0
         

தேவையான பொருட்கள் :
பால் - 2 லிட்டர்
பாதாம் - 15 கிராம்
பிஸ்தா - 15 கிராம்
முந்திரி - 15 கிராம்
கார்ன்ப்ளேவர் - 1 மேசைக்கரண்டி
ஜெலட்டின் - 2 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் - 1 தேக்கரண்டி
ஐசிங் சுகர் - 200 கிராம்

செய்முறை :

முதலில் 2 லிட்டர் பாலை நன்கு வற்றக்கய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்கவும்.


நன்கு கெட்டியானதும் இறக்கவும்.

பாதாம், முந்திரி, பிஸ்தாவை தண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

ஜெலட்டினை 50 மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக்கொண்டு கெட்டியான பாலில் முந்திரி கலவைஜெலட்டின்ரோஸ் எசன்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும். சுவையான குல்பி ஐஸ்கிரீம் தயார்.

  • குல்பிக்கு பாலினை தேர்வு செய்யும்போது வெண்ணை நீக்கப்படாத பாலினைத் தேர்வு செய்யவும்.
  • விருப்பமுள்ளவர்கள் வால்நட் உள்ளிட்ட வேறு பருப்புகளையும் சேர்த்து குல்பி தயார் செய்யலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)