தேவையான பொருட்கள்
அதிகம் பழுக்காத கொய்யா பழம் (தோல், விதை நீக்கியது) – 1 (பெரியது)
பச்சை மிளகாய் – தலா 4
எலுமிச்சை – 1,
கொத்தமல்லி – சிறிதளவு
தேங்காய் துருவல் - – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
கொய்யா துண்டுகளை பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கொத்தமல்லி, எலுமிச்சை சாறுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து, அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து இறக்கிவிட வேண்டும்.
இனிப்பு, புளிப்பு, காரம் இருப்பதால், சாதத்துக்கு மட்டுமின்றி சப்பாத்தி, சாண்ட்விச், உப்புமா என சகல சிற்றுண்டிகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. வயிற்றை சுத்தப்படுத்தும். உடலின் நச்சுக்களை நீக்கும். தொப்பை குறையும்.