நடைபயிற்சியின் வகைகளும் நன்மைகளும்

0

நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு.

மெதுவாக நடப்பது

எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும். இந்த வகை நடைபயிற்சி உடல் வலி, சோர்வுகளை போக்கும். உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். உடல் பருமன் உள்ளாவர்களுக்கு ஏற்ற நடையாகும்.




பவர் வாக்கிங்

கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது. இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும்.இந்த பவர் வாக்கிங் நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடையாகும்.


ஜாகிங்

நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும். அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது. அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும். தினசரி ½ மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்யலாம். இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடம் நடக்கலாம்.


நடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள்

  • சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.
  • இரத்த ஓட்டம் சீரடையும்.
  • நரப்பு தளர்ச்சி நீங்கி ,நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்
  • நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்
  • அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது
  • முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது
  • எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது
  • எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது
  • உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது
  • கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது
  • மாரடைப்பு-சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து –உடலையும் –மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது
  • உடல் மற்றும் மன்ச்சோர்வினை குறைக்கிறது
  • நன்கு தூங்கிட உதவுகிறது
  • கண்பார்வையை செழுமைபடுத்துகிறது


சுற்றுச்சூழல் மாசுபாடும், ரசாயன கழிவுகளும், நட்சுப்பொருட்கள் கலந்த உணவாலும், உடல் நலமும் – மனநலமும் பாதிக்கப்பட்டு வரும் இக்காலசூழலில், நச்சுக்காற்றின் தாக்கத்தை உடல் இயக்கத்தின் பாதிப்பை அளிக்காத வண்ணமும்,செலவின்றி ஆரோக்கியமாக – மகிழ்வுடன் வாழ உதவும் எளிமையான வழியாகும்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)